கோத்தபாய, ஜெகத் ஜெயசூரிய, சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக சட்ட முயற்சி! எனினும்...

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் முதல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிர்வாகம் வரையிலான கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் லண்டனில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் வைத்து இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இலங்கையின் அரசாங்கங்கள் உரிய தீர்வை காணவில்லை என இந்த கலந்துரையாடலின் போது பலரும் கருத்துரைத்தனர்.

'ராஜதந்திர வரப்பிரசாதத்துக்கு எதிரான சட்ட நுணுக்கங்கள்' என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான நீதிக்கான நிலையத்தின் தலைவரான தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா இதற்கு தலைமை தாங்கினார்.

இதன்போது கருத்துரைத்த அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவ அதிகாரிகளான ஜெகத் ஜெயசூரிய மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக தாம் பல்வேறு சட்ட முயற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

எனவே அவை ராஜதந்திர வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் பலனளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

Latest Offers