உதய கம்மன்பில பொய் கூறியுள்ளார் - நீதியமைச்சர்

Report Print Theesan in அரசியல்

இலங்கை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுவது உண்மையல்ல என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில கூறும் பொய்யான தகவல்கள் அவர் அரசியல் இலாபம் பெறும் நோக்கில் வெளியிடும் கருத்துக்கள் எனவும் அதனை பொறுப்புடன் நிராகரிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கம்மன்பிலவின் இந்த பொய் காரணமாக அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க நீதித்துறை ராஜாங்க திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் Patrick J.Ehelersக்கு மனவேதனையோ அசௌகரியமோ ஏற்பட்டிருந்தால் இலங்கை அரசு மற்றும் நீதித்துறை சார்பில் வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.