தடை தொடர்பில் அறிவித்த ஜனாதிபதி! வர்த்தமானி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

'தேசிய தௌஹீத் ஜமாத்' மற்றும் 'ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்' ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான வர்த்தமானி இன்னும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்படவில்லை.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரசாங்கத்தின் செய்தித்தாளொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் 'தேசிய தௌஹீத் ஜமாத்' மற்றும் 'ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்' ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பான நகல் ஆவணத்தை இன்னும் சட்டமா அதிபர் திணைக்களம் தயாரித்து தமக்கு அனுப்பவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எனினும் நகல் ஆவணத்தை தாம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி விட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்த வர்த்தமானி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.