இலங்கை மீதான தாக்குதலுக்கு மேற்குலக நாடுகள் காரணம் - தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், முஸ்லிம் மக்களின் பிரச்சினையல்ல எனவும் இது இலங்கைக்கு எதிராக மேற்குலகத்தினர் மேற்கொண்ட சதித்திட்டம் என தான் நினைப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மீரிகம தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால், அமெரிக்காவும் இந்தியாவும் விரோதம் கொண்டன. இலங்கையின் சீனாவின் அழுத்தங்களை இல்லாமல் செய்யும் தேவை அமெரிக்காவுக்கு இருக்கின்றது.

பயங்கரவாத தாக்குதல் எப்படி வந்தது. தற்போது இலங்கை கட்டுப்படுத்துவது நாம் அல்ல. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதும் இந்தியாவும் அமெரிக்காவும் எம்முடன் விரோதமாயின.

ஆசியாவின் அதிகாரம் சீனாவிடம் சென்றால், இவர்களின் பலம் குறைந்து போகும் என இந்த நாடுகள் நினைத்தன. இதனால், இந்த பிரச்சினை ஏகாதிபத்தியத்தின் பிரச்சினை அன்றி முஸ்லிம், சிங்கள மக்களின் பிரச்சினையல்ல.

பெரிய நெருக்கடி காரணமாக சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார தாக்குதல்களை நடத்திக்கொண்டுள்ளன. அதன் இறுதியான பலனை நாம் அனுபவிக்கின்றோம். நாம் பாதிக்கப்பட்டோம். இலங்கையில் அமெரிக்காவுக்கு தேவையான சூழ் நிலையை உருவாக்க வேண்டும். சீனாவின் அழுத்தங்களை இல்லாமல் செய்யும் தேவை அமெரிக்காவுக்கு உள்ளது.

இந்தியா மத்தல விமான நிலையத்தை கேட்கிறது. மறுபுறம் அமெரிக்கா திருகோணமலையை கேட்கிறது. அரசாங்கத்தினால் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இதுதான் காரணம். ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் தோற்கடிக்கப்பட்டது.

சீ.ஐ.ஏவின் உளவு அமைப்பாகவே அல்-கைதா உருவாக்கப்பட்டது. அதனை பயன்படுத்தியே ஈராக் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சதாம் ஹூசைனை கொலை செய்யும் வரை அது நீடித்தது. லிபியாவில் கடாபியை கொலை செய்தனர். சிரியா, ஏமன் போன்ற நாடுகளிலும் இதுவே நடக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் அரபு வசந்தம் என கொண்டு வரப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் முழு மத்திய கிழக்கும் செயலிழந்தது. நாட்டில் நடந்த தாக்குதல்களை எவரும் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் போராட்டத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சரியில்லை என்றால் வேறு அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டு அனுப்பப்படுவோர் இலங்கையின் அடுத்த அரச தலைவராக வேண்டும் என்று நினைக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக ஆட்களை கொண்டு வந்து இலங்கையில் முளைக்க வேலைத்திட்டத்தில் நாம் சிக்கக் கூடாது.

தற்போது சமூகம் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. மனிதர்களிடம் நேர்மையில்லை. வெட்டினால் நீலம், வெட்டினால் பச்சை என்று கூறுபவர்கள் தற்போது இல்லை. அரசியல் குழம்பி போயுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சமின்றி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதற்காக கட்சியை வலுப்படுத்த வேண்டும். மற்றவர்களின் விளக்கில் வெளிச்சத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மக்கள் கூட்டம் இருந்தது என்பதற்காக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 திகதி நிரூக்கப்பட்டது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.