தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க போவதில்லை - பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டி, கரந்தெனிய - பெந்தர, நியாகம, வெலிப்பிட்டிய பிரதேச செயலாளர்கள் பிரிவை 920 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் இன்று பிரதமர் இதனை கூறியுள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இலங்கையின் அரசியலில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போனது. அரசியல் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. சம்பவங்கள் நடந்து 9 மணி நேரத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை பிடிக்க முடிந்தது.

அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பிரதான அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் குற்றச் சாட்டு இருந்தால், எவரும் பாதுகாக்கப்பட மாட்டர்கள். இதற்கு அமைய செயற்பட நாம் விரும்புகிறோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக்க மற்றும் வஜிர அபேவர்தன உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Latest Offers