நான்கு இனங்களே இலங்கையின் அடையாளம் - ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

சிங்களவர், தமிழ், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய இனங்களே இலங்கையின் அடையாளம் எனவும் அடிப்படைவாதிகளுக்கு நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையர்கள் என்று வாழ வேண்டும் என்பதற்காகவே நாம் சுதந்திரம் பெற்றோம். சிங்களவர், தமிழ், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய இனங்களே இலங்கையின் அடையாளம். இதுதான் எமது பலம். இதனையே நாம் பயன்படுத்த வேண்டும்.

இது சில சமயங்களில் அடிப்படைவாதத்தை நோக்கி சென்றிருக்கின்றது. 1971 - 1989 ஆம் ஆண்டுகளில் சிங்களவர்கள் தரப்பில் அடிப்படைவாதம் ஏற்பட்டது. சமய அடிப்படையில் கிறிஸ்தவ அடிப்படைவாதம் ஆரம்பமாகியது. ஒரு விதத்தில் 30 ஆண்டுகள் தமிழர்கள் தொடர்பான பிரச்சினை இருந்தது.

தற்போது இஸ்லாம் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. தற்போது மற்றவர்களை சந்தேகத்தோடு பார்க்காது. அனைவரும் இணைந்து அடிப்படைவாதத்தை தோற்கடிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது. இதனால், நாம் அனைவரும் கைகோர்த்து, எமது பலம், என்ன பலவீனம் என்ன என்பதை கண்டறிந்து அந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் ஒரு இனமாக எப்படி மற்றவர்களுடன் இணைந்து வாழும் நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைவரும் கைகோர்த்து, ஒரு வீதமான அடிப்படைவாதத்தை தோற்கடிப்பது எப்படி என்பதை ஆராய வேண்டும்.

99 வீதமான மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு காட்ட வேண்டும். ஒரு வீதமான அடிப்படைவாதிகளுக்கு நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை. வாக்கு வங்கி குறைந்து விடும் என்று அஞ்சாமல் வெளிப்படையாக இதனை பேச வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.