குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நாமல் ராஜபக்ச

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சென்று பார்வையிட்டுள்ளார்.

அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி அலுவலகத்தின் பணிப்பாளர் கீதநாத் காசிலிங்கம், எதிர்க்கட்சி அலுவலகத்தின் விசேட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தேவாலயத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, ஆலயத்தின் போதகருடன் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.