றிசார்ட் பதியூதீன் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை - அத்துரலியே ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதின் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அடிப்படைவாதிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சில விடயங்கள் உறுதியாகி இருப்பதாலும் அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் பதவி விலகவில்லை என்றால், அனைத்து கடசிகளையும் இணைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் எனவும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...