இலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

Report Print Satha in அரசியல்

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையினால் இன்னும் கைது செய்ய முடியவில்லை என அவர் சுட்டிக்காடியுள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விடயத்தில் பாதுகாப்புத்துறையும் மிகவும் அவதானத்துடன் செயலாற்றி வருகின்றது.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துதவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகியவுடன் யார் பொறுப்பு கூற வேண்டியவர் என்பது பற்றியும் அனைவரும் அறிந்துக்கொள்ள முடியும்.

அந்தவகையில் குறித்த அறிக்கை வெளியாகும் வரை அனைத்து அரசியல்வாதிகளும் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே ஆகும்.

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை.

இதற்கு காரணம் அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையே ஆகும். ஆனாலும் அவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.