தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட முடியும் - அஜித் பெரேரா

Report Print Kamel Kamel in அரசியல்

தற்கொலைத் தாக்குதலை நேரடியாக மேற்கொண்ட நபர்களைத் தவிர அதற்கு உதவிகளை வழங்கியவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என அமைச்சரவை சாரா அமைச்சரும் சட்டத்தரணியுமான அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியவர்கள், நிதி உதவிகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் இலங்கை சட்டங்களில் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகரீகமான சமூகத்திற்கு மரண தண்டனை அவசியமற்றது என்ற போதிலும், இவ்வாறான பயங்கரவாதிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.