ஜனாதிபதியும் பிரதமருமே பதவி விலக வேண்டும் : நாமல் தெரிவிப்பு

Report Print Satha in அரசியல்

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகளுக்கு சம்மந்தமில்லை எனவும், இதனுடன் தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும் ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாடு பூராகவும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் அடுத்த வேலைத்திட்டம் என்ன என்பது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது.

எனவே எமது கட்சி சார்பாக, மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும், இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும்.

மஹிந்த ராஜபக்‌ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்து அரசியலை நடாத்தியிருந்தார்.

ஆனால் இந்நிலமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்த விடயத்தை எடுத்துக் கொண்டால் சில அரசியல்வாதிகள் இதில் சம்மந்தப்பட்டவர்கள் எனவும் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர்.

வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல்வாதிகள் கதைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல்வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

அரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என.

எனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும், பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தால் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்.

அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர்.

எனவே இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைவரும் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவ வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Latest Offers