சமூக வலைத்தளங்களை முடக்குவதில் எனக்கு உடன்பாடில்லை : லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Satha in அரசியல்

சமூக வலைத்தளங்களை முடக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சமூக வலைப்பதிவுத் தளங்களை முடக்குவதில் எனக்கு ஈடுபாடு இல்லை, சமூக வலைத்தளங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன், காலை உணவு உண்ணாத அதிருப்தி எனக்கு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.