மைத்திரியால் மக்களுக்கு நேர்ந்த கதி! சரத் பொன்சேகா சீற்றம்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் தலைவரது பலவீனத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தலைவர் ஒருவர் பலவீனமாக இருந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை மக்களே எதிர்நோக்க நேரிட்டும்.

தலைவரை விடவும் சிறந்த ஒருவர் இருந்தால் அவரின் காலைப் பிடித்து இழுக்கும் பழக்கமுடையவர் தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் கலங்கிய நீரில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர்.

அரசாங்கம் நீரை கலங்கச் செய்தால், எதிர்க்கட்சிகள் அதில் மீன்பிடிக்கத்தான் முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.