சற்றுமுன்னர் பிரதமர் ரணில் விடுத்த முக்கிய கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும், இனவாதிகள் மதவாதிகள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்க வேண்டாம் என பிரதமர் கோரியுள்ளார்.