ரணிலை கைது செய்க...! பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யுமாறு கோரி நாளைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தேசிய சங்கப் பேரவை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்பு உண்டு எனத் தெரிவித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க சில உள்ளிட்ட சிலருக்கு இந்த தாக்குதல் பற்றி தெரிந்திருந்தது என சங்கப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனால் இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்களில் மரணங்கள் சம்பவித்ததாகத் தெரிவித்துள்ளது.

பிரதமரின் நடவடிக்கையானது அரசியல் அமைப்பிற்பு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை மறைப்பது குற்றச் செயல்களுக்கு உதவுவதற்கு நிகரானது என தேசிய சங்கப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.