இது பௌத்த நாடு என்பதனை கார்தினாலே ஏற்றுக்கொண்டுள்ளார்: மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

இந்த நாடு பௌத்த நாடு என்பதனை கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே ஏற்றுக்கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இது சிங்க பௌத்த நாடு அல்ல இந்த நாடு பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஏனைய மதத்தினருக்கு சொந்தமானது என நேற்று வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பௌத்த நாடு என்பதனால் ஏனைய மதங்கள் நல்லிணக்கத்துடன் இருக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என கார்தினலே ஏற்றுக்கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர சொல்வதனையா அல்லது கார்தினால் சொல்வதனையா நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாரன்பிட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இவற்றைக் கூறியுள்ளார்.