வன்னி கட்டளைத்தளபதியை சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Dias Dias in அரசியல்

நாட்டில் நிலவி வரும் வன்முறையுடன் தொடர்புடையவர்களை விட்டு விட்டு சாதாரண பொதுமக்கள் மீது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி பிராந்திய முக்கிய தளத்தில் இன்று வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட் அவர்,

நாட்டில் இடம்பெற்ற பேரழிவுக்கு காரணம் வன்முறையுடன் தொடர்புடைய அரசியல் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படாமையே என்றும் கூறியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி, தாமும் மக்களை முழுமையாக பாதுகாக்க எந்நேரமும் ஒத்துழைப்பதாகவும் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மத ரீதியான தீவிரவாதத்தினை முழுமையாக அழிக்க மக்களின் ஒத்துளைப்பு மிகவும் அவசியமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திப்பு முடிந்தவுடன், இது குறித்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோவுக்கு சாள்ஸ் நிர்மலநாதன் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers