சஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

சஹ்ரான் காசிம் உட்பட்ட, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அண்மைய வருடங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்தமைக்கான சாட்சியங்கள் இல்லையென்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவம் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே மீண்டும் இந்த பதில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் “ஷங்ரிலா” மற்றும் “சினமன் கிரான்ட் ” ஹோட்டல்களில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் வியாபார வீசாவில் இந்தியாவுக்கு வந்துச்சென்றுள்ளனர் என்பதை இந்திய அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.