ஜனாதிபதி - பிரதமருக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துமாறு அஸ்கிரிய மஹாநாயக்கர் கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில், எதிர்காலத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும் என அஸ்கிரிய மஹாநாயக்கர் கோரியுள்ளார்.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே பலரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று மஹாநாயக்கர் கேட்டுள்ளார்.