அரசாங்கம் இனவாதத்துடன் விளையாடுகிறது: துமிந்த நாகமுவ

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போதைய அரசாங்கம் இனவாதத்துடன் விளையாடுவதை தனது அரசியல் சக்தியாக மாற்றிக் கொண்டுள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் அரச அடக்குறை என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி வாக்குகளை பெற்றுக்கொள்வது தற்போது ஆட்சியாளர்களின் நடைமுறையாக உள்ளது.

ஒரு கெட்டதை நிறுத்த மற்றுமொரு கெட்டதை கொண்டு வருவது தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாறியுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய அனைத்து அரசியல் செயற்பாடுகளும் பயங்கரவாத செயலாக கருதி செயற்பட அரசாங்கத்திற்கு முடியும் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.