றிசார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கும் பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் இருப்பதாக கூறி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அத்துரலியே ரதன தேரர், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன் போது, கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் இருப்பதாகவும் அதனை உடனடியாக சமர்பிக்க வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

முதலில், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தவறுகள் இருப்பதாக கூறி, பசில் ராஜபக்ச, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.