ஜனாதிபதியின் கனவு பலிக்காது! வரலாற்றில் இதுவே இருக்கும்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் மிலானோ நகரில் நேற்று இலங்கையர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்காக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலக பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரேயொரு தலைவர் என்ற பெருமையுடன் தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு மைத்திரி முயற்சித்த போதிலும் அந்தக் கனவு பலிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியாக இருந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்தவர் என்ற அவப் பெயர் மட்டுமே மைத்திரிக்கு எதிராக வரலாற்றில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முதுகெலும்புடைய ஜனாதிபதியும், பிரதமரும் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களை முடக்குவதன் மூலம் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.