மினுவங்கொடை கலவரத்தின் போது என்ன நடந்தது?

Report Print Steephen Steephen in அரசியல்

மினுவங்கொடை சம்பவத்துடன் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

“நான் திவுலப்பிட்டி பிரதேசத்திற்கு செல்லும் போது மினுவங்கொடையில் கலவரம் நடந்தது. நான் இறங்கி அதனை பார்த்தேன். அங்கு செல்ல வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

நான் அதனை கேட்டு விட்டு வரும் போது அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த படத்தை பதிவிட்டு எனது அணியினருக்கு அதில் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இது அநீதியானது.

எனது கையில் தொலைபேசியும் இருக்கவில்லை. இந்த சம்பவத்தை எங்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றனர்.

மினுவங்கொடையில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் எனது அணியை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.

எட்வர்ட் குணசேகரவின் ஆட்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ருவான் ரணதுங்கவின் குற்றவாளிகள்.

நான் நாட்டை மிகவும் நேசிக்கின்றேன். மிகப் பெரிய புத்திசாலி எனக் கூறி, ஒழிந்து வந்து குண்டுகளை வெடிக்க செய்பவன் அல்ல. எதனை செய்தாலும் பின்னால் இருந்து செய்ய மாட்டேன்.

முன்னால் இருப்பேன். பின்னால், இருந்து வழிநடத்த நான் சவுதி அரேபியா அல்ல” எனவும் மது மாதவ அரவிந்த குறிப்பிட்டுள்ளார்.