மக்கள் இன்னமும் பீதியில்! நாட்டில் இரத்த வெள்ளம் ஓடுவதை அனுமதிக்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் சில தலைவர்கள் மறைமுகமாக இனவாதத்தை தூண்டுகின்றார்கள் என ஜே.வி.பி.யின் பொது செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் மூலமே பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். நாட்டு மக்கள் இன்னமும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.

மக்கள் பீதியின்றி, அச்சமின்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய ஒற்றுமையை உருவாக்குவதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலும் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, மற்றும் இஸ்லாம் உள்ளிட்ட மதங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஜே.வி.பி கட்சி எப்பொழுதும் தேசிய ஒற்றுமையை போற்றும் கட்சியாகும். இந்த விடயத்தை நாம் எமது கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஏனைய அரசியல் கட்சிகளும் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். மீண்டும் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனை அனுமதிக்க முடியாது.

எந்த இனமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என கோருகின்றோம் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.