இனவாத பொறியில் சிக்கி பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம் - ஹர்ச டி சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

இனவாத பொறியில் சிக்கி பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்து விட வேண்டாம் என அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலகில் முன்னேறிய நாடாக எப்படி மாற்றுவது என்பதை பொருளாதார நிபுணர் என்ற வகையில் நான் பல சந்தர்ப்பங்களில் பொருளாதார ரீதியில் பகுப்பாய்வு செய்துள்ளேன். இந்த பகுப்பாய்வுகளை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் இணங்கவில்லை என்பதை நான் அறிவேன்.

அண்மையில் நடந்த மிலேச்ச பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர் காவு கொள்ளப்பட்டன. அந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இதன் காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் சீர்குலைந்தது. நாம் அனைவரும் பெரும் துயரத்திலும் கவலையிலும் இருக்கின்றோம்.

இந்த மிலேச்ச தாக்குதல்களை அரசாங்கத்தினால் தடுக்க முடியாமல் போனது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் உண்மையில் வெட்கமும் கவலையும் அடைகின்றேன்.

மக்களுக்குள் இருக்கும் வேதனையும் கவலையுடன் இருக்கும் தவறாக பயன்படுத்தி, மக்களை தூண்டி அதன் மூலம் இனவாத மோதல்களை உருவாக்க சிலர் முயசித்து வருவது அதிகரித்துள்ளது. அண்மை காலமாக நடந்த சம்பவங்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளன.

நாம் இந்த இனவாத பொறியில் சிக்கினால், மிகவும் சிரமமான முறையில் முகாமைத்துவம் செய்து வரும் நாட்டின் பொருளாதாரத் பாரிய பின்னடைவுக்கு உள்ளாவதை தடுக்க முடியாது. இதனால், ஏற்படும் பாதிப்பை எமது பல தலைமுறையினர் அனுபவிக்க நேரிடும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மிலேச்ச பயங்கரவாத குண்டு தாக்குதல்களை நடத்திய சில நாடுகளை போன்று இலங்கையையும் வேகமாக வழமை நிலைமைக்கு கொண்டு வர முடியும்.

அப்போது சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர முடியும் என்பதை பொருளாதார நிபுணர் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றோம்.

நடந்த தாக்குதல்களை பயங்கரவாத அணியின் தாக்குதல் என்று தனிமைப்படுத்துவது மற்றும் அந்த பயங்கரவாத அணியை அழிக்க பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதனால், இந்த சந்தர்ப்பத்தில் சில நபர்களின் தூண்டுதல்களுக்கு ஏமாறாது, அமைதியாக செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.