தீவிரவாத குழுக்கள் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சம்!

Report Print Murali Murali in அரசியல்

விடுதலைப் புலிகளை போன்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பலமடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், “அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து கடந்த மூன்று வாரகாலமாக நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகுவதற்கு நாம் வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க கூடாது.

இன வன்முறைகளின் ஊடாக தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பும், தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப எவ்வித வழிமுறைகளும் பின்பற்றவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers