ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாமல் ஆதரவு, மஹிந்த எதிர்ப்பு!

Report Print Rakesh in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாமல் ராஜபக்ச உட்பட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டு வருகின்றனர்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேரணையில் திருத்தம் வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காகப் பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழு நாளை கூடுகின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

Latest Offers