அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாளை கூடுகின்றது கூட்டு எதிர்க்கட்சி!

Report Print Murali Murali in அரசியல்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேணை குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி ஆராயவுள்ளனர்.

கொழும்பு விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நாளை முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரும் யோசனையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சாமல் ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 23 பேர் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு கையெழுத்திட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக செயற்படும் இயலுமை தொடர்பில் நம்பிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டே இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை” குறிப்பிடத்தக்கது.