ஹெட்டிப்பொல வன்முறையாளர்களை விடுவித்தேனா? நடந்தது இதுதான்

Report Print Ajith Ajith in அரசியல்

குருநாகல், ஹெட்டிப்பொல பகுதியில் 6 வன்முறையாளர்களை விடுவிக்க உதவியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர மறுத்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் வன்முறை ஏற்பட்டபோது தாம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தை பலர் முற்றுகையிட்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக குறித்த 6 வன்முறை தொடர்பான சந்தேகநபர்களையும் பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையே சிலர், நான் அவர்களை விடுவித்ததாக குற்றம் சுமத்துகின்றனர் என்று தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers