இரண்டு அரசாங்கங்களும் கே.பியை நீதிமன்றத்திற்கு கொண்டு வர தயாரில்லை! அனுரகுமார திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஆயுத விநியோகம் பலம் பொருந்திய நாடுகளின் பிரதான பொருளாதாரமாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நேற்று நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

உலகில் பிரதான வர்த்தகமாக ஆயுதங்கள், போர் தளபாடங்கள், மருந்துகள், விதைகள் என்பன காணப்படுகின்றன. எந்த பயங்கரவாத அமைப்புகளோ, எம்மை போன்ற நாடுகளோ ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களிடம் தொழிநுட்ப ரீதியிலான உயர் ரக ஆயுதங்கள் இருந்தன.

உலகில் இரண்டு ஆயுத சந்தைகள் இருக்கின்றன. அதில் ஒன்று சட்ட ரீதியானது. மற்றையது சட்டவிரோதமானது. இது தான் பலமிக்க நாடுகளின் பிரதான பொருளாதாரம்.

கே.பி. என்ற குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டார். அவரே விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தர். இரண்டு அரசாங்கங்களும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை.

புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் கே.பி. கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவர் தற்போது பாதுகாப்புக்கு மத்தியில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி பெரிய சமூக சேவையை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இலங்கையின் இரண்டு அரசாங்கங்களும் கே.பி. நீதிமன்றத்திற்கு கொண்டு வர தயாரில்லை. அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால், சர்வதேச ஆயுத சந்தை எப்படி இயங்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers