நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்க கூடும்! எச்சரிக்கும் பிக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போதைய நிலையில் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்க கூடும் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேரர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

நாடு மிகவும் பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் மேலும் பெரிய ஆபத்து ஏற்படலாம்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சொல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இவ்வாறான நிலைமையில், மிகவும் கொடிய பயங்கரவாதம் ஊடாக நாடு மீண்டும் யுத்தம் ஒன்றை நோக்கி தள்ளப்படலாம் எனவும் ஆனந்த சாகர தேரர் எச்சரித்துள்ளார்.

Latest Offers