ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே பயங்கரவாத அமைப்புகள் உருவாகின! ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உருவாகியதுடன் அவை பாதுகாக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சிலர் தமது அதிகாரத்திற்காக இனவாத மற்றும் மதவாத அணிகளை உருவாக்கினர்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் 26 அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கோத்தபாய ராஜபக்ச அன்று சம்பளம் வழங்கியிருந்தார்.

அத்துடன் பொதுபல சேனா அமைப்புக்கும் பணம் வழங்கப்பட்டது. இதன் காரணமாவே பௌத்த அடிப்படைவாத அணிகளும் உருவாகின எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.