அமைச்சரின் கருத்தில் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் நோக்கம் உண்டா? தேரர் கடும் கண்டனம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் உள்நோக்கம் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்களில் புதைந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாக பதுளை புராதன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி முருந்தெனிய தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்து தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்து இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் உள்நோக்கம் புதைந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் நிலவும் பதற்ற நிலைமையில் இவ்வாறான ஒரு அறிவிப்பை அமைச்சர் முன்வைப்பது எந்தவகையிலும் பொருத்தமான ஒன்று அல்ல.

நாட்டில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் மக்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் நிலையில், ஏதாவது ஒரு வகையில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் அமைச்சரின் இந்த அறிவிப்பில் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது

இதனால், இதுபோன்ற தூர நோக்கில்லாதவர்களின் அறிவிப்புக்களினால், கோபமடைந்து, வன்முறைகளில் ஈடுபடாமல் பொறுமையாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள சகல பௌத்த மக்களிடமும் மிக முக்கியமாக கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளாார்.