வடமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்! பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in அரசியல்

சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டம் மற்றும் அவசரக்கால சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன் வைக்குமாறு பொலிஸாருக்கு, பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், வரக்காபொல, குருநாகல், குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய, சிலாபம், மினுவாங்கொட ஆகிய இடங்களிலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 60 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.