வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்! அமைச்சர் ரிசாத் தெரிவிக்கும் புதிய விடயம்

Report Print Ajith Ajith in அரசியல்

திட்டமிடப்பட்ட வகையிலேயே வடமேல் மாகாண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சென்று சந்தித்ததன் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், வன்முறையாளர்கள் உந்துருளிகளிலும், பேருந்துகளிலும் ஒழுங்கமைப்பட்ட வகையில் முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் சென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதனை பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டார்.