தமிழீழ விடுதலைப் புலிகளை எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில், பொலிஸார் கொலை செய்யப்பட்டபோது, புலிகள் எழுந்துவிட்டனரென, தெற்கில் உள்ளவர்கள் கூறினார்கள். புலிகளை எழுப்பிக்கொண்டிருந்த போதுதான் நிலமை கைமீறிச் சென்றது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுதந்திரம் கிடைத்த பின்பு நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி ஆயுதம் ஏந்தியது.

அதனையடுத்து வடக்கை மையப்படுத்தி இடம்பெற்ற ஆயுதப் போராட்டமே, அரசியல் நிலைமைகளின் போதும் பேசப்பட்டது.

அப்போதைய தலைவர்கள் மேற்படி பிரச்சினையை மூன்று மாதங்களில் முடிக்க முற்பட்டதன் விளைவாகவே அது 30 வருடகாலப் பிரச்சினையாக வளர்ந்தது.

தற்போதைய பயங்கரவாதத்தையும் 3 மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பிற இனத்தவர்களை தாக்கும் பாதகச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்.

சிறிய குழுவினரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு கடந்த காலங்களில் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து நிதி வந்துள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களில் குடும்பமாக இணைந்துகொள்ளும் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.