ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று கையளிப்பு

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையில் 64 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும்படி சபாநாயகரிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்புகளைக் கொண்டிருந்தமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.