ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

அடிப்படைவாத செயற்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலைமைக்கு மத்தியில் சிலர் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த தாக்குதல் சம்பவத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி சில அரசியல் தலைவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருகின்றனர்.

வெளிநாடு ஒன்றில் இப்படியான நிலைமையோ இதனை விட பயங்கரமான நிலைமையோ ஏற்பட்டால், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எந்த பேதங்களும் இன்றி பிரச்சினையை தீர்க்க இணைந்து செயற்படும், எனினும் துரதிஷ்டவசமாக இலங்கையில் அப்படியான நிலைமை இல்லை எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.