சிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது - ரோசி சேனாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர சபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முஸ்லிம் இனத்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. சகல முஸ்லிம்களும் அடிப்படைவாதிகள் அல்ல. எம்முடன் பல முஸ்லிம்கள் இருக்கின்றனர். பல்வேறு அழுத்தங்கள் மூலம் சிங்கள பயங்கரவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர்.

இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தேசிய கீதத்தை மிகவும் கௌரவமாக பாட வேண்டும்.

தேசிய கீதத்தின் அர்த்தத்திற்கு அமைய செயற்பட வேண்டும். இதற்கு அமைய வாழ்ந்தால், எந்த சேதங்களும் ஏற்படாது எனவும் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.