அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! அரசியல்வாதிகளின் கருத்து

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான யோசனையை ஆதரிப்பதா இல்லையா என்பது அந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய தீர்மானிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு கொண்டு வரப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக கட்சி எங்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை. கட்சியின் தெளிவுப்படுத்தலுக்கு அமையவும் கத்தோலிக்க மக்கள், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனைக்கு அமையவும் நான் தனிப்பட்ட ரீதியில் தீர்மானத்தை எடுப்பேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.