சீனாவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட தூது குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான தூது குழுவினர் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இதன்போது இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க சீனா தன்னாலான உதவிகளை செய்யும் என சீன ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.