ரிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த கையொப்பம் இடவில்லை!

Report Print Rakesh in அரசியல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினரால் இன்று கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதிகள் வெளியாகியுள்ளன.

ரிஷாத்துக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையொப்பம் இடவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஸ்.வியாழேந்திரன் மட்டுமே கையொப்பம் இட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச எதிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளன. அதனை அவசரப்பட்டு இப்போது ஏன் சமர்ப்பிக்க வேண்டும்? அதில் உள்ள தவறுகள் பிரேரணை தோற்பதற்கே வழிவகுக்கும்.

தோற்கும் பிரேரணையைக் கொண்டுவந்து ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்கள். எனவே, முதலில் பிரேரணையில் உள்ள தவறுகளைத் திருத்துங்கள்.

அதன்பின்னர் அதனை ஆதிப்பதா? இல்லையா? என்று நான் முடிவெடுப்பேன் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மஹிந்த தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.