ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் தொடர்பில் தீர்மானிக்கவுள்ள ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இரண்டு ஆளுநர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் தீர்மானிப்பார்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் இதுவரையில் அவை எவையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே எந்தவொரு அரசியல்வாதியையும் பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.