ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய செல்வந்தர் குறித்து மிக முக்கிய தகவல் கசிந்தது

Report Print Steephen Steephen in அரசியல்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மாபோலை பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்ட செல்வந்த வர்த்தகர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

எம்.இஸட்.எம்.றிஸ்வான் என்ற இந்த வர்த்தகர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வத்தளை, மாபோலா நகர சபைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.