றிசார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இன்னும் தீர்மானத்தை எடுக்கவில்லை - சுதந்திரக்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி என்ற வகையில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் கூட்டு எதிர்க்கட்சிக்குள்ளும் இது சம்பந்தமாக கருத்து முரண்பாடுகள் இருப்பதை காண முடிகிறது எனவும் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.