சுய விமர்சனம் செய்ய முஸ்லிம் சமூகம் தயார் - அமைச்சர் கபீர் ஹாசிம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கவனத்தில் கொண்ட சமூகம் என்ற முறையில் சுய விமர்சனம் செய்ய முஸ்லிம் மக்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் அரபு மயமாக்கல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அறநெறி பாடசாலைகள் தொடர்பில் எந்த கட்டுப்பாடும் இல்லை எனக் கூறப்பட்டது. எமது முன்னோர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் பெயர்கள் சிங்களப் பெயர்கள்.

நான் பிரதான முஸ்லிம் நபர். சிறிய தரப்பினர் கொண்டு அனைவரையும் அளவிட வேண்டாம். தற்போது சுய விமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும். எமக்கிடையில் இருந்த நம்பிக்கையை இழப்பதற்கான தவறை எமது சமூகம் செய்துள்ளது.

அதனை மாற்றியமைக்க வேண்டிய காலம் வந்துள்ளது. எமது கடமை என்ற வகையில் இலங்கையர் என்ற ரீதியில் இது பற்றி பேசுகிறோம். அந்த பொறுப்பை மனதில் நிறுத்தி இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.