நாட்டை மற்றுமொரு சிரியாவாக மாற்றாமல் தடுக்க வேண்டும்: குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கறுப்பு ஜூலையில் போன்று குழம்பி, கலவரங்களில் ஈடுபடாமல், அமைதியான முறையில் நடந்து, இந்த நாட்டை மற்றுமொரு சிரியாவாக மாற்றாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை சுதர்ஷனாராம விகாரையில் நடைபெற்ற மத்துகமை, அகலவத்தை உள்ளூராட்சி சபையின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் அரசியல் இலாபம் பெற முயற்சிக்காது நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், தீயை அணைக்க அனைவரும் ஒதுக்கி வைத்து விட்டு, இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களின் சிறந்த தலைவராக வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மாறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கலவரங்களை ஏற்படுத்துவது போல், நடந்துக்கொள்ளாமல், எவருக்கும் கஷ்டங்களை ஏற்படுத்தாது அமைதியாக இருந்து, பாதுகாப்பு தரப்பினர் தமது கடமைகளை செய்ய உதவுமாறு கர்தினால், கிறிஸ்தவ மக்களுக்கு கூறினார்.

உலகில் பலமிக்க நாடுகள் தமது ஆயுதங்களை விற்பனை செய்ய சந்தைகளை உருவாக்க இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தொடர்ந்தும் கூறி வந்தார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.