இதுவொரு பௌத்த நாடு என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்: ரவி கருணாநாயக்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஒரே தேசம், ஒரே இனம், ஒரே நீதி என்ற தொனிப்பொருளின் கீழ் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். இலங்கை என்பது பெளத்த நாடு என்பதை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகயீனமுற்றிருக்கும் கொடகொட தம்மாவாஸ தேரரின் சுகநலம் விசாரிக்க இன்று அமைச்சர் சென்றிருந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

அண்மையில் இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சூழ்நிலைகள் நாட்டிற்குள் பாரிய வன்முறையை தோற்றுவிக்க முடியும். அவ்வாறானதொரு சூழலையே தற்போது எமது நாட்டில் காண முடியுமாக இருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அமைதிப்படுத்தி மக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதே தலைவர்களாக தற்போது நாம் செய்ய வேண்டிய கடமையாக உள்ளது. அதற்காக நாம் அனைவரும் ஒரே இனமாக செயற்பட வேண்டும்.

ஒரே தேசம், ஒரே இனம், ஒரே நீதி என்ற தொனிப்பொருளின் கீழ் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். இலங்கை என்பது பெளத்த நாடு என்பதை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என்றார்.