இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று ஜேர்மனின் தூதுவரிடம் உறுதியளித்துள்ளார்.

ஜேர்மனின் தூதுவர் ஜோர்ன் ரொட் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார்.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பு பிரதிநிதிகளும் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில், நாட்டில் இயல்பு நிலையை கொண்டு வர பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளார்.

இதற்கான கோரிக்கையை தாம் ஏற்கனவே விடுத்துள்ளதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, பெற்றோர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துள்ளமையே இதற்கான காரணம் என்று கூறினார்.

Latest Offers