ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களின் பின்..! இதனை செய்தது பயங்கரவாத தலைவர் சஹ்ரானின் அணி அல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாதத்தை முளையில் கிள்ளி எறிய அரசாங்கம் என்ற வகையில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின், நாட்டிற்குள் குண்டு தொடர்பான அச்சம் ஏற்பட்டது. இதனை செய்தது பயங்கரவாத தலைவர் சஹ்ரானின் அணி அல்ல.

கூட்டு எதிர்க்கட்சியின் அணியினரே இதனை செய்தனர். நாட்டில் இரத்தம் சிந்தும் சம்பவங்களை ஏற்படுத்தும் பெரிய தேவை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.